/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உப்பளம் - ஏருசிவன் சாலை வளைவுகளில் எச்சரிக்கை அவசியம்
/
உப்பளம் - ஏருசிவன் சாலை வளைவுகளில் எச்சரிக்கை அவசியம்
உப்பளம் - ஏருசிவன் சாலை வளைவுகளில் எச்சரிக்கை அவசியம்
உப்பளம் - ஏருசிவன் சாலை வளைவுகளில் எச்சரிக்கை அவசியம்
ADDED : மார் 08, 2025 01:27 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த உப்பளம் கிராமத்தில் இருந்து ஏருசிவன், மடிமைகண்டிகை, வீரங்கிமேடு, மத்ராவேடு, அரவாக்கம் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் சாலை, பல்வேறு இடங்களில் வளைவுகளுடன் அமைந்துள்ளது.
இந்த சாலை வளைவுகளில் வாகன ஓட்டிகள் வளைந்து வளைந்து பயணிக்கும்போது சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஒரு சில இடங்களில், சாலையோரங்களில் முட்செடிகள் வளர்ந்து இருப்பதால், வளைவுகள் இருப்பதே தெரிவதில்லை.
இந்த வழித்தடத்தில் புதிதாக பயணிப்போர் தடுமாற்றம் அடைகின்றனர். வளைவுகள் இருப்பது குறித்து வாகன ஓட்டிகள் முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையில், அப்பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்படவில்லை. இதனால், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, இச்சாலையின் வளைவு பகுதிகளை விரிவுபடுத்தவும், எச்சரிக்கை பலகைககள் வைக்கவும் மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.