/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வடாரண்யேஸ்வரர் கோவிலில் சிமென்ட் கல் சாலை அமைப்பு
/
வடாரண்யேஸ்வரர் கோவிலில் சிமென்ட் கல் சாலை அமைப்பு
ADDED : ஆக 03, 2024 01:48 AM

திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது.
இக்கோவிலின் மதில் சுவரை சுற்றிலும் பன்றிகள் சுற்றுவதும், கால்நடைகளை வைத்து பராமரிப்பதும், பகுதிவாசிகள் துணிகளை துவைப்பது என அசுத்தம் செய்து வந்தனர்.
இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வந்தது. அதேபோன்று வடாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வெளியூர்களில் இருந்து கார் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்திச் செல்வர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்திற்கும் ஊராட்சி நிர்வாகத்திற்கும் பக்தர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து கோவில் மதில் சுவரை சுற்றி சிமென்ட் கல் சாலை அமைக்கப்பட்டது.
தற்போது கோவிலுக்கு வரும் வாகனங்கள் இந்த சாலையில் நிறுத்தி செல்ல வசதியாக உள்ளதால், பக்தர்கள் நிம்மதியடைந்து உள்ளனர்.