ADDED : பிப் 25, 2025 07:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், வீரகநல்லுார், மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிரத்தினம் மனைவி ரோசியம்மாள், 62; இவர், நேற்று மதியம், வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, 'பல்சர்' இருசக்கர வாகனத்தில் மர்ம நபர் ஒருவர், ரோசியம்மாள் வீட்டின் முன் வந்து, இருசக்கர வாகனத்தை நிறுத்தினார். பின், அந்த நபர் குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வருமாறு ரோசியம்மாளிடம் கூறியதை தொடர்ந்து, தண்ணீர் பாத்திரத்தில் கொண்டு வந்து கொடுக்க முயன்றார்.
அப்போது, மர்ம நபர், ரோசியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த, 5 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இது குறித்து ரோசியம்மாள் அளித்த புகாரையடுத்து, திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.