/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செங்கல்பட்டு தொகுதி ஓட்டு எம்.பி.,க்கு கை கொடுக்குமா?
/
செங்கல்பட்டு தொகுதி ஓட்டு எம்.பி.,க்கு கை கொடுக்குமா?
செங்கல்பட்டு தொகுதி ஓட்டு எம்.பி.,க்கு கை கொடுக்குமா?
செங்கல்பட்டு தொகுதி ஓட்டு எம்.பி.,க்கு கை கொடுக்குமா?
ADDED : ஏப் 18, 2024 08:09 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தனி தொகுதியில் தி.மு.க., சார்பில் செல்வம் போட்டியிடுகிறார்.
இவர், கடந்த 2019 தேர்தலில், செங்கல்பட்டு சட்டசபை தொகுதியில் மட்டும், 1.47 லட்சம் ஓட்டுகள் பெற்றார். அதற்கு அடுத்தபடியாக, காஞ்சிபுரத்தில் 1.23 லட்சம் ஓட்டுகள் பெற்றார்.
மீண்டும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ள எம்.பி., செல்வத்துக்கு, செங்கல்பட்டு சட்டசபை தொகுதி ஓட்டுகள் மீண்டும் கைகொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
செங்கல்பட்டில் இரு ஆண்டுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்குள்ள பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படாமலேயே உள்ளன. செங்கல்பட்டில் உள்ள மருந்து உற்பத்தி மையம் பல ஆண்டுகளாக செயல்படவில்லை.
சென்னையிலிருந்து நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் ரயில், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்கிறது. இதனால், செங்கல்பட்டு பயணியர் அவதிப்படுகின்றனர்.
இது போன்ற பல பிரச்னைகள் செங்கல்பட்டில் தீர்க்கப்படாமலேயே உள்ளதால், இம்முறை மீண்டும் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் செல்வத்துக்கு, செங்கல்பட்டு தொகுதி கைகொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த முறை பெற்ற 1.47 லட்சம் ஓட்டுகளைவிட அதிகம் பெறுவாரா அல்லது அதைவிட குறைவாக பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

