/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சென்னை வருமான வரி அணிகள் அகில இந்திய வாலிபாலில் அபாரம்
/
சென்னை வருமான வரி அணிகள் அகில இந்திய வாலிபாலில் அபாரம்
சென்னை வருமான வரி அணிகள் அகில இந்திய வாலிபாலில் அபாரம்
சென்னை வருமான வரி அணிகள் அகில இந்திய வாலிபாலில் அபாரம்
ADDED : மார் 11, 2025 12:15 AM

சென்னை, அகில இந்திய வாலிபால் போட்டியில், இருபாலரிலும் சென்னை வருமான வரி அணிகள், 'ரன்னர் அப்' பட்டத்தை வென்றன.
பர்கூர் வாலிபால் கிளப் சார்பில், அகில இந்திய வாலிபால் போட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2ல் துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
சென்னை வருமான வரி, இந்திய ராணுவம், விமானப்படை, எஸ்.ஆர்.எம்., பல்கலை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட ஆண்களில் எட்டு அணிகளும், பெண்களில் ஆறு அணிகளும் பங்கேற்றன.
ஆண்களுக்கு, 'லீக்கம் நாக் அவுட்' முறையிலும், பெண்களில் 'லீக்' மற்றும்'சூப்பர் லீக்' முறை யிலும், போட்டிகள் நடத்தப்பட்டன.
ஆண்களுக்கான இறுதி போட்டியில், கேரளா மாநில மின்வாரிய துறை அணியும், சென்னை வருமான வரி அணியும் மோதின.
அதில், 25 - 19, 16 - 25, 25 - 18, 21 - 25, 15 - 13 என்ற கணக்கில் கேரளா மின்வாரியம் வெற்றி பெற்று முதலிடத்தையும், சென்னை இரண்டாமிடத்தையும் பிடித்தன. மூன்றாம் இடத்தை தெற்கு ரயில்வே, நான்காம் இடத்தை, எஸ்.ஆர்.எம்., பல்கலை வென்றன.
அதேபோல், பெண்களில் கேரளா மின்வாரிய அணி முதலிடத்தையும், சென்னை வருமானவரி இரண்டாம்இடத்தையும், எஸ்.ஆர்.எம்., பல்கலை மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, முறையே மூன்று மற்றும் நான்காம் இடங்களையும் கைப்பற்றின.