/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சின்னம்மாபேட்டை பஜாரில் குரங்குகள் அட்டகாசம்
/
சின்னம்மாபேட்டை பஜாரில் குரங்குகள் அட்டகாசம்
ADDED : ஜூலை 06, 2024 01:36 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பஜார் பகுதி, ரயில் நிலைய சாலை, அரிசந்திராபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டமாக திரிவதால், அப்பகுதிவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும், அவர்கள் அத்தியாவசிய பொருட்களை பைகளில் வாங்கி செல்லும்போது, அவர்களை பின் தொடர்ந்து வந்து பிடிங்கி செல்வதும், விரட்டும்போது கடிக்க வருவதும், வீட்டு மின் இணைப்பு கம்பிகள் மீது செல்வதும் தொடர்வதால், அச்சமடைந்து உள்ளனர். மேலும் அப்பகுதிகளில் உள்ள கடைகள், வீடுகளில் புகுந்து மளிகை, காய்கறி, தின்பண்டங்களை எடுத்துச்செல்வதோடு, அங்குள்ள பொருட்களை தள்ளி சேதப்படுத்துகின்றன.
சிறுவர் - சிறுமியர், பெண்களை கடிக்கவும் பாய்கின்றன.
நாளுக்கு நாள் தொல்லை அதிகரித்து வருவதால், குரங்குகளை பிடிக்க, வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.