/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பஸ் படியில் தொங்குவதில் போட்டி பள்ளி மாணவர்கள் இடையே மோதல்
/
பஸ் படியில் தொங்குவதில் போட்டி பள்ளி மாணவர்கள் இடையே மோதல்
பஸ் படியில் தொங்குவதில் போட்டி பள்ளி மாணவர்கள் இடையே மோதல்
பஸ் படியில் தொங்குவதில் போட்டி பள்ளி மாணவர்கள் இடையே மோதல்
ADDED : ஜூலை 03, 2024 11:15 PM
திருத்தணி:திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பெரும்பாலான மாணவர்கள், திருத்தணியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து அரசு பேருந்துகளில் வருகின்றனர்.
நேற்று காலை அருங்குளம் கிராமத்தில் இருந்து, திருத்தணி நோக்கி வந்த தடம் எண்: டி 45 என்ற அரசு பேருந்தில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணம் செய்தனர்.
அருங்குளம் மற்றும் நாரணமங்கலத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவனுக்கும், சீனிவாசபுரத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவனுக்கும் இடையே பேருந்து படியில் தொங்குவதில் தகராறு ஏற்பட்டு வந்தது.
திருத்தணி பைபாஸ் சாலை பேருந்து நிறுத்தத்தில் இரண்டு மாணவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். மேலும், இரு மாணவர்களின் நண்பர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி ரகளையில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும், திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன் மற்றும் போலீசார் மோதலில் ஈடுபட்ட நான்கு மாணவர்களை, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
பின், மாணவர்களின் எதிர்காலம் கருதி, அவர்களின் பெற்றோரை வரவழைத்து, 'இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாணவர்களை எச்சரித்து, பெற்றோரிடம் தனித்தனியாக கடிதம் பெற்று அனுப்பி வைத்தனர்.