/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
லாரி மோதி துப்புரவு பணியாளர் பலி
/
லாரி மோதி துப்புரவு பணியாளர் பலி
ADDED : மார் 22, 2024 09:00 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் ,30. திருவள்ளூர் நகராட்சியில் துப்புரவு ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்த இவர் கடந்த 20ம் தேதி மாலை தன் பஜாஜ் பல்சர் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
திருத்தணி நெடுஞ்சாலையில் கொசவன்பாளையம் கிராமம் அருகே சென்ற போது திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி ஈச்சர் லாரி இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
படுகாயமடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பலியானார்.
இதுகுறித்து இவரது மனைவி கீதா கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

