/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'துாய்மை சேவை' விழிப்புணர்வு திட்டம் கலெக்டர் ஆலோசனை
/
'துாய்மை சேவை' விழிப்புணர்வு திட்டம் கலெக்டர் ஆலோசனை
'துாய்மை சேவை' விழிப்புணர்வு திட்டம் கலெக்டர் ஆலோசனை
'துாய்மை சேவை' விழிப்புணர்வு திட்டம் கலெக்டர் ஆலோசனை
ADDED : செப் 10, 2024 08:03 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், 'துாய்மை சேவை--2024' விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடந்தது.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி துறை வாயிலாக, 'துாய்மை பாரத இயக்கம்' திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் துாய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ், வரும் 17- அக்.,2 வரை பொது இடங்களில் துாய்மை பணி மேற்கொண்டு, துாய்மை கிராமம், நகர்பகுதி உருவாக்குதல், மகளிர் குழு வாயிலாக வீடுகளில் குப்பையினை தரம் பிரித்து வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும், பள்ளி, கல்லுாரிகளில் சுகாதாரம் மற்றும் குடிநீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு வினையும், ஊரக வளர்ச்சி, மகளிர் மேம்பாடு, கல்வி துறை, பொது சுகாதாரம், வருவாய், தமிழ்நாடு குடிநீர் வழங்கல், மாசு கட்டுப்பாட்டு துறை மற்றும் சமூகநல துறை ஆகிய துறைகளுடன் இணைந்து 'துாய்மை சேவை' நிகழ்வை திறம்பட செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.