/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: கலெக்டர் ஆலோசனை
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: கலெக்டர் ஆலோசனை
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: கலெக்டர் ஆலோசனை
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: கலெக்டர் ஆலோசனை
ADDED : செப் 07, 2024 07:38 AM
திருவள்ளூர் : முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான ஆலோசனை கூட்டம், கலெக்டர் தலைமையில் நடந்தது.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:
முதல்வர் விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில், செப்.,10-24 வரை பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர் மற்றும் பொதுமக்கள் என, 5 பிரிவுகளில் நடத்தப்பட உள்ளது.
போட்டி நடைபெறும் இடங்களில், குடிநீர், தற்காலிக கழிப்பறை வசதி, சாமியானா, விழா மேடை அமைத்தல், மைதானம் துாய்மை செய்தல் ஆகியவற்றை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
விளையாட்டு போட்டி நடைபெறும் அனைத்து இடங்களிலும் சுகாதாரக் குழுவுடன் ஆம்புலன்ஸ் எற்பாடு செய்ய வேண்டும்.
விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும். ஒவ்வொரு விளையாட்டுக்கும் காவலர்களை கொண்டு பாதுகாப்பு சிறந்த முறையில் ஏற்பாடு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 21ல் நடைபெறும் போட்டிகளில் பங்குபெறும் வீரர் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஆசிரியர் ஒருவரை உதவியாளராக நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் சேதுராஜன், நகராட்சி கமிஷனர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
***