/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முதல்வர் விளையாட்டு போட்டி முன்பதிவு செப்., 2 வரை நீட்டிப்பு
/
முதல்வர் விளையாட்டு போட்டி முன்பதிவு செப்., 2 வரை நீட்டிப்பு
முதல்வர் விளையாட்டு போட்டி முன்பதிவு செப்., 2 வரை நீட்டிப்பு
முதல்வர் விளையாட்டு போட்டி முன்பதிவு செப்., 2 வரை நீட்டிப்பு
ADDED : ஆக 28, 2024 07:45 PM
திருவள்ளூர்:முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு முன்பதிவு செய்ய, செப்., 2 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி, பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என, ஐந்து பிரிவுகளில் நடத்தப்பட உள்ளது.
ெப்., மற்றும் அக்., மாதம், மொத்தம் 27 விளையாட்டுகள், 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடைபெறும். மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவருக்கு தலா, 1 லட்சம், 75,000, 50,000 ரூபாய் வழங்கப்படும். குழு போட்டிகளில் முறையே, 75,000, 50,000, 25,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்.
இப்போட்டிகளில் கலந்து கொள்ள, http://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்ய செப்., 2 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும், விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.