/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோடையை குளிர்விக்க தயாராகிறது தென்னங்கீற்று
/
கோடையை குளிர்விக்க தயாராகிறது தென்னங்கீற்று
ADDED : மார் 01, 2025 11:53 PM

பள்ளிப்பட்டு, ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டத்தில் இருந்து பள்ளிப்பட்டு நகர் வழியாக பாயும் லவா, குசா ஆறுகள், பள்ளிப்பட்டு அருகே இணைந்து கொசஸ்தலை ஆறாக தமிழகத்தில் பாய்கிறது.
கொசஸ்தலை ஆறு, பள்ளிப்பட்டு, பெருமாநல்லுார், மேலப்பூடி, கீழப்பூடி, சொரக்காய்பேட்டை, நெடியம், ராமச்சந்திராபுரம் உள்ளிட்ட கரையோர கிராமங்களை வளம் கொழிக்க செய்கிறது.
இந்த கரையோர கிராமங்களில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன. இளநீர், தேங்காய் உள்ளிட்டவை விற்பனை செய்வதன் வாயிலாக விவசாயிகளுக்கு வருவாய் கிடைப்பதுடன், தென்னங்கீற்று விற்பனை செய்வதால் உபரி வருவாய் கிடைக்கிறது.
நெடியம் பகுதியில் தென்னங்கீற்றுகளை பதப்படுத்துவதற்காக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீரில் ஊறவைப்பதில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். வரும் கோடையை கருத்தில் கொண்டு, தென்னங்கீற்று முடையும் பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.