/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வரும் 31க்குள் கரும்பு பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு
/
வரும் 31க்குள் கரும்பு பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு
வரும் 31க்குள் கரும்பு பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு
வரும் 31க்குள் கரும்பு பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு
ADDED : மார் 01, 2025 11:55 PM
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்ட கரும்பு விவசாயிகள், வரும் 31ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது:
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், 2016 - 17ம் ஆண்டு முதல் 2024- - 25ம் ஆண்டு 'காரிப்' பருவம் வரை 379.74 கோடி ரூபாய் பயிர் இழப்பீடு தொகை, 1,77,099 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. 2024 - -25ம் ஆண்டு சொர்ணவாரி நெற்பயிருக்கு 826 விவசாயிகளுக்கு, 16.63 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகை விடுவிக்கப்பட்டு உள்ளது.
நவரை பருவ நெல் 'ரபி' மற்றும் இதர பயிர்களுக்கு, 299 விவசாயிகள் 1,455 ஏக்கர் பரப்பளவில் காப்பீடு செய்துள்ளனர்.
கரும்பு பயிருக்கு ஏக்கருக்கு, 1,200 ரூபாயை கட்டணமாக செலுத்தி, வரும் 31ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, வேளாண் அறிவியல் மையம் வாயிலாக, நவரை பருவ நெல் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, விவசாயிகளுக்கு 60,000 ரூபாய் மானியத்தில் இடுபொருட்கள் வழங்கப்பட்டன.