/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழைநீர் கால்வாய்களை சீரமைக்க ஊராட்சிகளுக்கு கலெக்டர் உத்தரவு
/
மழைநீர் கால்வாய்களை சீரமைக்க ஊராட்சிகளுக்கு கலெக்டர் உத்தரவு
மழைநீர் கால்வாய்களை சீரமைக்க ஊராட்சிகளுக்கு கலெக்டர் உத்தரவு
மழைநீர் கால்வாய்களை சீரமைக்க ஊராட்சிகளுக்கு கலெக்டர் உத்தரவு
ADDED : மே 30, 2024 09:53 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழைக்கு முன் ஊராட்சிகளில் மழைநீர் கால்வாய்களை சீரமைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், தென்மேற்கு பருவமழையின் போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:
ஊராட்சிகளில் உள்ள கால்வாய்களை துாய்மைபடுத்தி, தூர்வார வேண்டும். அனைத்து வார்டுகளிலும், 10 நாட்களுக்குள் பணிகளை முடிக்க வேண்டும். அகற்றப்பட்ட வடிகால் படிவுகளை, 2 நாட்களுக்குள் அப்புறப்படுத்தி கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
சிறுபாலங்களில் உள்ள படிவுகளை அகற்றி, நீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சார கேபிள், டெலிபோன் கேபிள் மற்றும் குடிநீர் குழாய்கள் இடையூறாக இருப்பின் அதை மாற்றியமைப்பதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திடக் கழிவை அகற்றி, கிருமி நாசினி தெளிக்க வேண்டும். குடிநீர் குழாய் கசிவு அல்லது உடைப்பு ஏதேனும் இருப்பின் உடன் சீரமைக்க வேண்டும். தெருவிளக்கு எரியாமல் இருந்தால், அதையும் சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூடுதல் கலெக்டர் - வளர்ச்சி சுகபுத்ரா,
ஆவடி மாநகராட்சி கமிஷனர் ஷேக் அப்துல் ரகுமான் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.