/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போக்குவரத்து நெரிசல், விபத்து தடுக்க கலெக்டர் உத்தரவு
/
போக்குவரத்து நெரிசல், விபத்து தடுக்க கலெக்டர் உத்தரவு
போக்குவரத்து நெரிசல், விபத்து தடுக்க கலெக்டர் உத்தரவு
போக்குவரத்து நெரிசல், விபத்து தடுக்க கலெக்டர் உத்தரவு
ADDED : செப் 07, 2024 07:58 PM
திருவள்ளூர்:மாவட்ட நுகர்வோர் அமைப்பு மற்றும் திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் குழுவினர் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் வீரராகவ கோவில் இடதுபுறம் தேர் இருக்கும் இடம் பிரதன சாலையில் மழைநீர் கால்வாய் அபாயகரமான உள்ளதால் விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது. அதை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
திருவள்ளூர் ஜே.என்.சாலையில் தனியார் உணவகங்களில் முன் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் விபத்து ஏற்படுகிறது. திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட என்.ஜி.ஓ.,காலனி, தேவி மீனாட்சி நகரில் பெரும்பாலான இடங்களில் பாதாள சாக்கடை இணைப்பு பள்ளங்களை சரியாக செப்பனிடாததால் வாகனங்கள் கடக்கும் பொழுது விபத்து ஏற்படுகிறது.
ஜே.என்.சாலையில் ஐ.ஆர்.என்., திருமண மண்டபம் அருகில் பாதுகாப்பில்லாத கால்வாய் அருகில் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் பிரபுசங்கர் நகராட்சி மற்றும் போக்குவரத்து போலீசாரிடம் ஆலோசனை நடத்தினார். மேற்கண்ட குறைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.