/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயிலில் கத்தியுடன் பயணித்த கல்லுாரி மாணவர் கைது
/
ரயிலில் கத்தியுடன் பயணித்த கல்லுாரி மாணவர் கைது
ADDED : ஆக 23, 2024 07:53 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்கும், இரு வேறு கல்லுாரிகளில் பயிலும் மாணர்வகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.
சில மாதங்களுக்கு முன் ஓடும் ரயிலில் கல்லுாரி மாணவர் ஒருவரை, கல்லுாரி மாணவர்கள் மூவர் கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காலை மற்றும் மாலை நேரங்களில் கல்லுாரி மாணவர்கள் பயணிக்கும் ரயில் பெட்டிகளில், கொருக்குப்பேட்டை ரயில் போலீசார் தொடந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில், சென்னை நோக்கி சென்ற புறநகர் மின்சார ரயிலில், சந்தேகத்தின் பேரில், 17 வயது கல்லுாரி மாணவர் ஒருவரை சோதனையிட்டனர். அவரிடம், பட்டா கத்தி இருந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர். நேற்று திருவள்ளூரில் உள்ள இளஞ்சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு எச்சரிக்கை விடுத்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

