/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஜி.பேயில் வந்த ரூ.2 லட்சம் கையாடல் தனியார் கம்பெனி மேலாளர் மீது புகார்

ADDED : ஆக 22, 2024 06:55 PM
திருவள்ளூர்:தனியார் நிறுவனத்தில், 2 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக, மேலாளர் மீது உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மணவாளநகர் அடுத்த ஒண்டிக்குப்பத்தில், வி.வி., பவர் சொல்யூஷன் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இதன் உரிமையாளர் பால் வசந்தகுமார், 58. மணவாளநகர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
எனது நிறுவனத்தில், சென்னை அம்பத்துாரைச் சேர்ந்த, கலியபெருமாள் மகன் பாலமுருகன் என்பவர், மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த, ஜூன் 8 க்கு முன், கம்பெனிக்கு ஜி.பேயில் வந்த, 2 லட்சம் ரூபாய் பணத்தை அவரது வங்கி கணக்கிற்கு மாற்றி, மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.