/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி தாலுகா அலுவலகத்தில் ஏலம் விடப்படாத பறிமுதல் மணல்
/
திருத்தணி தாலுகா அலுவலகத்தில் ஏலம் விடப்படாத பறிமுதல் மணல்
திருத்தணி தாலுகா அலுவலகத்தில் ஏலம் விடப்படாத பறிமுதல் மணல்
திருத்தணி தாலுகா அலுவலகத்தில் ஏலம் விடப்படாத பறிமுதல் மணல்
ADDED : ஆக 29, 2024 11:22 PM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் ஊராட்சி காசிநாதபுரம் ஏரியில் இயங்கி வருகிறது திருத்தணி தாசில்தார் அலுவலகம். இந்த அலுவலக வளாகத்தில், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள், கார் மற்றும் ஆட்டோக்கள் என, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏலம் விடப்படாமல் உள்ளன.
இந்நிலையில், வருவாய் துறையினரால் அனுமதியின்றி மணல் கடத்தல் மற்றும் சவுடு மண் கடத்தல் போன்ற வாகனங்களை பறிமுதல் செய்தும், அந்த மணல் மற்றும் மண் போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் மீது குவிக்கப்படுகின்றது.
தாசில்தார் அலுவலக வளாகத்தில், பறிமுதல் செய்த வாகனங்கள், மணல் மற்றும் மண் ஆகியவை உள்ளதால் தாசில்தார் அலுவலகத்திற்கு வரும் பயனாளிகளின் வாகனங்கள் நிறுத்துவதற்கும், ஓய்வு எடுப்பதற்கும் முடியாமல் சிரமப்படுகின்றனர்.
மேலும், மணல், மண்ணை ஏலம் விட்டால் அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும். ஆனால் கடந்த ஒரு வருடமாக பறிமுதல் செய்த மணல் மற்றும் மண்ணை ஏலம் விடாமல் வருவாய் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மணலை ஏலம் விட்டு, போலீசார் பறிமுதல் செய்த வாகனங்களை மீட்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.
இது குறித்து திருத்தணி தாசில்தார் மலர்விழி கூறியதாவது:
தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள மணல் மற்றும் சவுடு மண்னை, அளந்து, எவ்வளவு எடை என்பது குறித்து நிர்ணயித்து தருமாறு திருத்தணி பொதுப் பணித்துறையினருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். அவர்கள் மணல் எத்தனை யூனிட் என அளவீடு செய்தால், மணல் மற்றும் மண்ணை ஏலம் விட்டு, அதற்கான தொகை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.