/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் 950 விநாயகர் சிலை பிரதிஷ்டை நாளை, 11ல் நீர்நிலைகளில் கரைப்பு
/
திருவள்ளூரில் 950 விநாயகர் சிலை பிரதிஷ்டை நாளை, 11ல் நீர்நிலைகளில் கரைப்பு
திருவள்ளூரில் 950 விநாயகர் சிலை பிரதிஷ்டை நாளை, 11ல் நீர்நிலைகளில் கரைப்பு
திருவள்ளூரில் 950 விநாயகர் சிலை பிரதிஷ்டை நாளை, 11ல் நீர்நிலைகளில் கரைப்பு
ADDED : செப் 08, 2024 01:02 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் முழுதும், 950 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இச்சிலைகள் அனைத்தும், நாளை 9 மற்றும் 11ல் நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தியை பொதுமக்கள் நேற்று, உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். ஒரு அடி, இரண்டு அடி உயர களிமண்ணால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகளை, பொதுமக்கள், குழந்தைகள் ஆர்வமாக வீடுகளுக்கு வாங்கிச் சென்றனர்.
பூ, பழம், பொறி, கரும்பு, வாழை மரம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விலை நேற்று அதிகமாக இருந்தாலும், அதனை பொருட்படுத்தாமல், பொதுமக்கள் வாங்கிச் சென்று, விநாயகரை வழிபட்டனர்.
கோவில்களிலும், விநாயகர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிேஷகம் நடந்தது. திருவள்ளூர், என்.ஜி..ஓ., காலனி சந்தான விநாயகர் கோவிலில் கணபதி ேஹாமம் செய்ப்பட்டு, வெள்ளிகவசம் அணிவிக்கப்பட்டது.
பூங்கா நகர் சிவ விஷ்ணு கோவிலில் உள்ள செல்வ விநாயகர், ஜெயா நகர் மகா வல்லப கணபதி கோவில், தீர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ள வரசித்தி விநாயகர், ஆயில் வெற்றி விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில், சிறப்பு அபிேஷகம் நடந்தது.
திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, திருத்தணி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவாலங்காடு, கடம்பத்துார் என, மாவட்டம் முழுதும், 950 விநாயகர் சிலைகள் அமைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். ஐந்து அடி முதல் 10 அடி வரை, சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இச்சிலைகள் அனைத்தும், நாளை 9 மற்றும் 11ல் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட, 15 நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.