/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சமுதாயக்கூடம் கட்டும் பணி; பூனிமாங்காடில் பாதியில் நிறுத்தம்
/
சமுதாயக்கூடம் கட்டும் பணி; பூனிமாங்காடில் பாதியில் நிறுத்தம்
சமுதாயக்கூடம் கட்டும் பணி; பூனிமாங்காடில் பாதியில் நிறுத்தம்
சமுதாயக்கூடம் கட்டும் பணி; பூனிமாங்காடில் பாதியில் நிறுத்தம்
ADDED : ஆக 16, 2024 11:12 PM

திருத்தணி : திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு ஊராட்சியில், 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் காதணி விழா, நிச்சயதார்த்தம், திருமணம், பிறந்த நாள் விழா, மஞ்சள் நீராட்டு விழா என பல்வேறு சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு, 15 கி. மீ., துாரத்தில் உள்ள திருத்தணி நகருக்கு செல்ல வேண்டியுள்ளது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் பூனிமாங்காடு கிராமத்தில், குறைந்த செலவில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு சமுதாயக்கூடம் கட்டுவதற்கு தீர்மானித்தது.
இரு மாதங்களுக்கு முன், 33.43 லட்சம் ரூபா யில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
சமுதாயக்கூட கட்டுமான பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக கடந்த ஒரு மாதமாக சமுதாயக்கூட பணிகள் நடைபெறாமல் நிறுத்தப்பட்டுள்ளன.  சமுதாயக்கூட பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.