/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஹிந்து சமய ஆணையர் அலுவலக கட்டடப்பணி 'விறுவிறு'
/
ஹிந்து சமய ஆணையர் அலுவலக கட்டடப்பணி 'விறுவிறு'
ADDED : ஆக 09, 2024 12:56 AM
திருவள்ளூர்:ஹிந்து சமய உதவி ஆணையர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில், சிறுவாபுரி முருகன் கோவில் உள்ளிட்ட, 550க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த கோவில்கள் உள்ளன.
இந்த கோவில்கள் அனைத்தும், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் தற்போது, ஜெயா நகரில் தனியார் அலுவலகத்தில் வாடகைக்கு இயங்கி வருகிறது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட அலுவலகம் எதிரில், தீர்த்தீஸ்வரர் கோவிலுடன் இணைந்த பாரிவேட்டை உற்சவ கட்டளை பராமரிப்பில் உள்ள இடத்தில், புதிய அலுவலகம் கட்ட அரசு 1.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
புதிய உதவி ஆணையர் அலுவலக கட்டுமான பணி, ஒரு மாதத்திற்கு முன் துவங்கியது.
தற்போது இப்பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும், 2025 ஜூன் மாதத்திற்குள் இப்பணி நிறைவடைந்து, பயன்பாட்டிற்கு வரும் என, திருவள்ளூர் மாவட்ட ஹிந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.