/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி
/
மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி
ADDED : ஆக 24, 2024 01:06 AM

திருவள்ளூர்,:திருமழிசை மடவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் தெட்சிணாமூர்த்தி மகன் நரேன், 33
திருமழிசை மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்த இவருக்கு சரண்யா, 30 என்ற மனைவியும், மூன்று வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.
இவர் நேற்று முன்தினம் மாலை திருமழிசை தொழிற்பேட்டையில் மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் துாக்கி வீசப்பட்டார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்த வெள்ளவேடு போலீசார் உடலை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சரண்யா கொடுத்த புகாரின்படி வெள்ளவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.