/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
80 ஆண்டுகளாக சொந்த கட்டடம் இல்லை பரிதாப நிலையில் கூட்டுறவு கடன் சங்கம்
/
80 ஆண்டுகளாக சொந்த கட்டடம் இல்லை பரிதாப நிலையில் கூட்டுறவு கடன் சங்கம்
80 ஆண்டுகளாக சொந்த கட்டடம் இல்லை பரிதாப நிலையில் கூட்டுறவு கடன் சங்கம்
80 ஆண்டுகளாக சொந்த கட்டடம் இல்லை பரிதாப நிலையில் கூட்டுறவு கடன் சங்கம்
ADDED : மார் 12, 2025 08:06 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே துராபள்ளம் பஜார் பகுதியில், 1946ம் ஆண்டு, பெரிய ஓபுளாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் துவங்கப்பட்டது. இதுவரை அந்த சங்கத்திற்கு என சொந்த இடம் இல்லாததால், கடந்த, 80 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.
தற்போது, துராபள்ளம் பகுதியில், தொம்பரை ஆண்டவர் கோவில் அருகே ஒரு வாடகை கட்டத்தில் அந்த சங்கம் இயங்கி வருகிறது.
அந்த சங்கத்தில், எளாவூர், பெரிய ஓபுளாபுரம், சின்ன ஓபுளாபுரம், சுண்ணாம்புகுளம், மெதிப்பாளையம், நரசிங்கபுரம் உள்ளிட்ட, 12 ஊராட்சிகள் இடம் பெறுகின்றன. அதன் கீழ், 16 ரேஷன் கடைகள், 5,000 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். சங்க உறுப்பினர்களாக, 9,500 பேர் உள்ளனர்.
குறுகலான வாடகை கட்டடத்தில் அந்த கூட்டுறவு சங்கம் இயங்குவதால், ஊழியர்கள் தங்களின் அன்றாட பணிகளை மேற்கொள்வதில் சிரமத்தை சந்திப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ரேஷன் கடை பணிகளும் பாதிக்கப்படுகிறது. பழமையான கூட்டுறவு சங்கத்திற்கு என தனி இடம் ஒதுக்கி, புதிய கட்டடம் நிறுவ வேண்டும் என கிராம மக்கள் பல ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து உடனடியாக இடம் ஒதுக்கி சொந்த கட்டடத்தில் இயங்க, வழி வகை செய்ய வேண்டும் என, ஊராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.