/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நேரு பஜார் ஆக்கிரமிப்புகளை அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள்
/
நேரு பஜார் ஆக்கிரமிப்புகளை அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள்
நேரு பஜார் ஆக்கிரமிப்புகளை அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள்
நேரு பஜார் ஆக்கிரமிப்புகளை அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள்
ADDED : ஆக 16, 2024 12:29 AM

ஆவடி:ஆவடி, நேரு பஜார் சாலையில் 150க்கும் மேற்பட்ட சிறு கடைகள் உள்ளன. இதில், சில கடைக்காரர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை கடந்து, சாலையில் கடை அமைத்து விதிமீறலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் சென்று வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.
ஏற்கனவே, கடந்தாண்டு இது குறித்து நம் நாளிதழில் சுட்டிக்காட்டப்பட்டது. இதன் எதிரொலியாக, போலீஸ் கமிஷனர் சங்கர், சாலையோர ஆக்கிரமிப்பை அகற்றி, சாலையில் கயிறு பதிக்க உத்தரவிட்டார்.
அதன்படி, ஆவடி போக்குவரத்து போலீசார், மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் உதவியுடன் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாகனங்கள் நிறுத்த கயிறு பதித்து ஒழுங்குப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, நேரு பஜார் சாலையில் ஆக்கிரமிப்புகள் மீண்டும் அதிகரித்தது. இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஆபிரகாம், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உதவியுடன், சாலையில் ஆக்கிரமித்து இருந்த கடைகள், விளம்பர பதாகைகளை 'பொக்லைன்' இயந்திரம் உதவியுடன் அகற்றினர்.
அப்போது, இளைஞர் ஒருவர் ஆபத்தை உணராமல் மின் மாற்றியில் கயிறு கட்டி செருப்பு வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அதிகாரிகள் அதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின், அவரை எச்சரித்து, கடையை அகற்ற உத்தரவிட்டனர்.
நேரு பஜார் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றியதால் பாதசாரிகள் நிம்மதி அடைத்தனர். அதிகாரிகள், ஆக்கிரமிப்புகள் அகற்றுவத்தோடு நின்று விடாமல், தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

