ADDED : செப் 04, 2024 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை,:பெரியபாளையம் அருகே, மேல்மாளிகைப்பட்டு கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் வேலன், 35. நேற்று முன்தினம் மதியம் திடீரென இவரது குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது.
இதில் வீட்டில் இருந்த, 55,000 ரூபாய், 4 சவரன் நகை, துணிமணிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமாயின. பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.