/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயிர் அறுவடை பரிசோதனை முதன்மை செயலர் பார்வை
/
பயிர் அறுவடை பரிசோதனை முதன்மை செயலர் பார்வை
ADDED : மார் 13, 2025 02:42 AM

திருத்தணி:பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் 2024-25 ன் கீழ் ஆண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் குறித்து திருத்தணி ஒன்றியம், கேராமங்கலம் கிராமத்தில் சம்பா நெல் பயிருக்கான பயிர் அறுவடை பரிசோதனை ஆய்வு நடந்தது.
நெற்பயிர் அறுவடை ஆய்வில் பொருளியல் மற்றும் புள்ளியல் துறை முதன்மை செயலரும் ஆணைய ருமான ஜெயா, கூடுதல் இயக்குனர் பாரதி, மண்டல புள்ளியல் இணை இயக்குனர் உமாராணி, புள்ளியல் துறை துணை இயக்குனர் ரகு மற்றும் புள்ளியல் உதவி இயக்குனர் ருக்குமணி ஆகியோர் நெற்பயிர் அறுவடை செய்து விவசாயிகளிடம் விளக்கி கூறினார்.
தொடர்ந்து திருத்தணி அங்காடி புலனாய்வு திட்ட மையத்தில், அங்குள்ள அங்காடிகளில் பல்வேறு பொருட்களின் மொத்த விலை மற்றும் சில்லறை விலை விவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, புள்ளியல் துறை அலுவலர்கள், வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.