/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டில் அழியும் நிலையில் நுாற்பு ஆலைகள்
/
ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டில் அழியும் நிலையில் நுாற்பு ஆலைகள்
ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டில் அழியும் நிலையில் நுாற்பு ஆலைகள்
ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டில் அழியும் நிலையில் நுாற்பு ஆலைகள்
ADDED : செப் 04, 2024 02:22 AM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு சுற்றுப்பகுதியில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாரம்பரியமாக நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த நுாற்றாண்டில் கைத்தறி நெசவு அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விசைத்தறி நெசவுக்கு நெசவாளர்கள் தொழிலை மேம்படுத்தி கொண்டனர்.
நெசவு தொழிலில், நெசவு மற்றும் நெசவு சார்ந்த சாயம் தோய்த்தல், பாவு தயாரித்தல், ஊடை நுால் நுாற்பு உள்ளிட்ட பல்வேறு உப தொழில்களும் நடந்து வந்தன. இதில், ஊடை நுாற்பு பணியில் பெண்கள் ஈடுபட்டு வந்தனர்.
நுால் நுாற்பதில் கிடைக்கும் குறைந்த வருவாயில் குடும்பத்தை திறம்பட நடத்தியவர்களும், குழந்தைகளை படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்ட வந்த பெண்கள் ஏராளமானோர் உள்ளனர்.
நுால் நுாற்கும் பணியில் ஈடுபட்டு வந்த பெண்கள் தாற்சார்பு உடையவர்களாக விளங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளாக நெசவு தொழில், போதிய தொழில் வாய்ப்பு இன்றி நசிந்து வருகிறது. நெசவு தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள், வாயிற்காவலர் மற்றும் சமையல் வேலைக்கு சென்று விட்டனர்.
நெசவு தொழில் அழியும் நிலைக்கு சென்றுள்ளதால், நுால் நுாற்பு பணியில் ஈடுபட்டு வந்த பெண்களும் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தில் ஒன்றிரண்டு நுாற்பு ஆலைகள் இயங்கி வருகின்றன. விசைத்தறிகளுக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டும் விதமாக, அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, நெசவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.