/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தடப்பெரும்பாக்கத்தில் குடிநீர் தொட்டி சேதம்
/
தடப்பெரும்பாக்கத்தில் குடிநீர் தொட்டி சேதம்
ADDED : செப் 01, 2024 10:58 PM

பொன்னேரி,: மீஞ்சூர் ஒன்றியம், தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தடப்பெரும்பாக்கம் காலனி பகுதியில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட, குடிநீர் மேல்நிலை தொட்டி, 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
தற்போது, இந்த தொட்டியின் பல்வேறு பகுதிகளில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து சேதமடைந்து உள்ளது.
மேலும், துாண்கள் சேதமடைந்து இருப்பதால், ஊழியர்கள் தொட்டியின் மேல்பகுதிக்கு செல்வதற்கு அச்சப்படுகின்றனர். இதனால், பல மாதங்களாக தொட்டி சுத்தம் செய்யப்படாமல் உள்ளது.
தொட்டியின் உள்பகுதியிலும் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, குடிநீருடன் கலந்து வருவதால் குடியிருப்புவாசிகளின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
சேதமடைந்துள்ள இந்த குடிநீர் தொட்டியில், நாள் முழுதும் தண்ணீர் தேக்கி வைத்து வினியோகிக்கப்படுவதால், சுமை தாங்காமல் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலை இருக்கிறது.
இதன் அருகே வசிக்கும் குடியிருப்புவாசிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
குடியிருப்புவாசிகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதால், உடனடியாக குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை இடித்துவிட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.