/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி தாலுகா அலுவலக தரைதளம் சேதம்
/
திருத்தணி தாலுகா அலுவலக தரைதளம் சேதம்
ADDED : ஆக 21, 2024 12:13 AM

திருத்தணி:திருத்தணி தாசில்தார் அலுவலகத்திற்கு திருத்தணி மற்றும் திருவாலங்காடு ஆகிய ஒன்றியங்களில் இருந்து தினமும் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர்.
மேலும் சான்றுகள், முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை போன்றவை பெறுவதற்கும் பயனாளிகள் வருகின்றனர்.
தாசில்தார் அலுவலக முதல் தளத்தில் தாசில்தார், தேர்தல் பிரிவு, வட்ட வழங்கல், கணினி பிரிவு மற்றும் அலுவல ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் முதல்தளத்தில் போடப்பட்ட ‛டைல்ஸ்' ஆங்காங்கே பழுதடைந்து உடைந்து உள்ளது.
இதனால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கடும் சிரமப்படுவதுடன் அவ்வப்போது தவறி விழுந்து காயம் அடைகின்றனர்.
தேசம் அடைந்த தரைதளத்தை சீரமைக்க வேண்டும் என தாசில்தார், திருத்தணி பொதுப்பணித்துறையினருக்கு புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மெத்தனத்தால் நாளுக்கு நாள் தரைத்தளம் சேதம் அடைவது அதிகரித்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து தாசில்தார் அலுவலக தரைதளத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.

