sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

46 வழித்தடத்தில் மினி பஸ் இயக்க முடிவு குக்கிராம மக்கள் பயனடையும் வகையில் திட்டம்

/

46 வழித்தடத்தில் மினி பஸ் இயக்க முடிவு குக்கிராம மக்கள் பயனடையும் வகையில் திட்டம்

46 வழித்தடத்தில் மினி பஸ் இயக்க முடிவு குக்கிராம மக்கள் பயனடையும் வகையில் திட்டம்

46 வழித்தடத்தில் மினி பஸ் இயக்க முடிவு குக்கிராம மக்கள் பயனடையும் வகையில் திட்டம்


ADDED : மார் 01, 2025 11:58 PM

Google News

ADDED : மார் 01, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் பொன்னேரி ஆகிய விழுப்புரம் கோட்ட போக்குவரத்து பணிமனைகளில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், கணிசமான அளவிற்கு தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

மாவட்டத்தில் 526 ஊராட்சிகளுக்கு உட்பட்ட, 2,600க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கிராமங்களுக்கு பொது போக்குவரத்து வசதியில்லாததால், 'ஷேர்' ஆட்டோக்களில் மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் பேருந்து சேவை இல்லாத வழித்தடங்களில் மினி பேருந்து இயக்கும் வகையில் புதிய விரிவான மினி பேருந்து திட்டம் 2024ஐ தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்படி, பேருந்து வசதி இல்லாத மக்கள் தொகை 100 பேர் மற்றும் அதற்கு அதிகமான குடும்பங்கள் உள்ள கிராமம், குக்கிராமங்கள் மற்றும் குடியிருப்புகள் கொண்ட பகுதியில் ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதன் வாயிலாக பொதுமக்கள் அருகிலுள்ள முக்கிய பேருந்து நிலையம், நகரம், பெருநகரங்களுக்கு சென்றடைவதற்கு ஏதுவாக பேருந்து வசதி உறுதிபடுத்தப்படும்.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பேருந்து சேவை இல்லாத வழித்தடங்களில் மினி பேருந்து சேவை வழங்கும் பொருட்டு 46 புதிய வழித் தடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.

குறைந்த பட்சம் 7 கி.மீட்டரில் இருந்து அதிகபட்சம் 25 கி.மீட்டர் துாரத்திற்கு மினி பேருந்து சேவை இயக்க அனுமதி அளிக்கப்பட உள்ளது. மொத்தம் 46 வழிதடங்களில் மினி பேருந்து சேவை இயக்கப்படஉள்ளது.

இதற்கான, அறிவிப்பு, கடந்த, பிப்., 21ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

வரும் மே மாதத்திற்குள் மினி பேருந்து இயக்க அனுமதி வழங்கப்பட உள்ளது. இதற்காக, மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட, 46 வழித்தடங்களில் மினி பேருந்து இயக்க விரும்பும் தனியார் மினி பேருந்து உரிமையாளர்கள் தங்களது விண்ணப்பத்தை மார்ச் 20க்குள் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் 46 வழித்தடங்களில் மினி பேருந்து சேவை இயக்க வழித்தடம் கண்டறியப்பட்டு உள்ளது. அந்த வழித்தட விவரம், விண்ணப்பிக்க வேண்டிய வழிகாட்டுதல் போன்றவை, திருவள்ளூர் மாவட்ட இணையதள முகவரியான https://tiruvallur.nic.in/-ல் வெளியிடப்பட்டு உள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்குவதற்கான 'பெர்மிட்' விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அறிவிப்பு வெளியான தேதியில் இருந்து 30 நாட்களுக்குள், திருவள்ளூர், செங்குன்றம் மற்றும் பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

குறைந்தபட்சம் கடம்பத்துார் - குப்பம்கண்டிகை வரை குறைந்தபட்சம் 7 கி.மீட்டர் துாரமும், அதிகபட்சமாக திருவள்ளூர் அரசு மருத்துவமனை - தண்டலம் குயின்ஸ் லேண்ட் வரை 24.5 கி.மீட்டர் துாரமும் மினி பேருந்து இயக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us