/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரேஷன் கட்டடம் சேதம் சீரமைக்க வலியுறுத்தல்
/
ரேஷன் கட்டடம் சேதம் சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : மார் 07, 2025 02:12 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது சின்னமண்டலி ஊராட்சி. இந்த ஊராட்சியில், 5,000 பேர் வசிக்கின்றனர்.
பஞ்சாயத்து அலுவலகம் அருகே ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில், 400க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்கள், மாதம்தோறும் அரிசி, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
இந்த ரேஷன் கடை கட்டடம் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நிலையில் சில ஆண்டுகளாக இந்த கட்டடம் பழுதடைந்து உள்ளது. நுழைவு வாயில், தரைத்தளம் மற்றும் கட்டடத்தின் உள்பகுதி பாழடைந்து உள்ளது. இதனால், இந்த கடைக்கு ரேஷன் வாங்க வருவோர், அச்சமடைந்துள்ளனர்.
மேலும், மழை காலத்தில் மழைநீர் சுவர் வழியாக உட்புகுந்து விடுவதால், ரேஷன் பொருட்கள் நனைந்து சேதமடைந்து வருவதாக, கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதமடைந்த கட்டடத்தை அகற்றி விட்டு, புதிய ரேஷன் கடை கட்ட வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.