/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோர விபத்தை தவிர்க்க தடுப்பு அமைக்க கோரிக்கை
/
சாலையோர விபத்தை தவிர்க்க தடுப்பு அமைக்க கோரிக்கை
ADDED : ஆக 25, 2024 01:48 AM

பொன்னேரி:பொன்னேரி - பழவேற்காடு மாநில நெடுஞ்சாலையில் உப்பளம், மெதுார், திருப்பாலைவனம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இவற்றில், உப்பளம், பரிக்குப்பட்டு, போலாச்சியம்மன்குளம் ஆகிய பகுதிகளிலும், சிறுபாலங்கள் உள்ள இடங்களிலும் சாலையோரம் பள்ளமாக இருக்கிறது; எச்சரிக்கை தடுப்புகள் ஏதுமில்லை.
இது போன்ற இடங்களில் வாகனங்கள் எதிர் எதிரே பயணிக்கும்போது, சாலையோர பள்ளங்களில் நிலை தடுமாறி விழும் வாய்ப்பு உள்ளது.
தற்போது வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெடுஞ்சாலைத் துறையினர், சாலைகளில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.
அசம்பாவிதங்களை தவிர்க்க மேற்கண்ட பணிகளுடன், விபத்து ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை, விரிவாக்கம் செய்யவும், சாலையோரங்களில் இரும்பு தடுப்புகள் மற்றும் ஒளிரும் விளக்குகள் பொருத்தவும் வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

