/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நகராட்சி அலுவலர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
நகராட்சி அலுவலர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 19, 2024 11:13 PM

பொன்னேரி: பொன்னேரி நகராட்சியில் வருவாய் இழப்பு ஏற்படுத்திய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று, டாக்டர் அம்பேத்கர் பொதுநலசங்கத்தின் சார்பில் தலைவர் ஆனந்தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:
பொன்னேரி நகராட்சியில் அனுமதியின்றி வீடுகள் கட்டப்படுகின்றன. வீடு கட்டுவதற்கு வரைபடம் அனுமதிக்கு, 25,000 ரூபாய் லஞ்சம் பெறப்படுகிறது. சின்னகாவணம் தர்மராஜா குளம் சீரமைத்த ஒரே மாதத்தில் சேதம் அடைந்து உள்ளது.
லோக்சபா தேர்தல் நேரத்தில் பந்தல், சாப்பாடு மற்றும் மழைக்காலங்களில் முகாம்களில் தங்கியவர்களுக்கு சாப்பாடு போட்டதாக, 5 லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டு உள்ளது.
நகராட்சி பணியாளர்களை வைத்து, மழைநீர் கால்வாய்களை துார்வாரி, வெளியாட்களை வைத்து துார்வாரியதாக கணக்கு காண்பிக்கப்படுகிறது. பல்வேறு வகைகளில் பொதுமக்களின் வரிப்பணத்தை வீணாக்கி, வருவாய் இழப்பை ஏற்படுத்திய நகராட்சி அலுவலர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.

