/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு மருத்துவமனையை கண்டித்து பழவேற்காடில் ஆர்ப்பாட்டம்
/
அரசு மருத்துவமனையை கண்டித்து பழவேற்காடில் ஆர்ப்பாட்டம்
அரசு மருத்துவமனையை கண்டித்து பழவேற்காடில் ஆர்ப்பாட்டம்
அரசு மருத்துவமனையை கண்டித்து பழவேற்காடில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 11, 2024 04:56 AM
பழவேற்காடு: பழவேற்காடு மீனவப்பகுதியில், 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள அரசு மருத்துவமனையில் பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாததால் அவர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக இரவு நேரத்தில் மருத்துவர்கள் இல்லாமல், அவசர சிகிச்சைகளை பெற முடியாமல் தவிக்கின்றனர்.
பழவேற்காடு அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து நேற்று, புரட்சி பாரதம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேற்கொண்டனர். அக்கட்சியின் மாவட்ட செயலர் ராஜா தலைமையில், 30க்கும் மேற்பட்டோர் இதில் ஈடுபட்டனர். தமிழக அரசையும், சுகாதாரத்துறையையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
ஆர்பாட்டத்தின்போது, பழவேற்காடு அரசு மருத்துவமனையில், 24 மணி நேரமும் மருத்துவர் இருக்க வேண்டும்; செவிலியர், மருந்தாளுனர் உள்ளிட்ட ஊழியர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும்.
மருத்துவமனை வளாகத்தை சுகாதாரமாகவும், துாய்மையாகவும் வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.