/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்சாரம் தாக்கி பலி வாரியம் விளக்கம்
/
மின்சாரம் தாக்கி பலி வாரியம் விளக்கம்
ADDED : செப் 10, 2024 10:38 PM
திருவள்ளூர்:ஊத்துக்கோட்டை அருகே வெலமண்டிகையை சேர்ந்த, சிவய்யா, 57 என்பவர், அப்பகுதியில் உள்ள வயலுக்கு செல்லும்போது, அங்கிருந்த டிரான்ஸ்பார்மரில் தொங்கிய, ஒயரில் கைப்பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். பென்னலுார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பெரியகுப்பம் பொறியாளர் கனகராஜன் விடுத்துள்ள செய்தியில், 'ஆக.,31 காலை 6.45 மணியளவில், மின்வாரியத்திற்கு தொடர்பில்லாத சிவய்யா என்பவர், மின்மாற்றியில் உள்ள சுவிட்சின் ஒரு பகுதியை திறந்து, மின்வாரிய அனுமதியின்றி தன்னிச்சையாக பியூஸ் போட முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட மின்னோட்டத்தை அறியாமல் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
டிரான்ஸ்பார்மரில் ஒயர் தொங்கவில்லை என, தெரிவித்துள்ளார்.

