/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
/
திருத்தணி கோவிலில் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருத்தணி கோவிலில் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருத்தணி கோவிலில் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
ADDED : மார் 31, 2024 11:20 PM
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவர் முருகப்பெருமானை வழிப்பட்டு செல்கின்றனர்.
இந்நிலையில், கடந்த, 29ம் தேதி புனிதவெள்ளி நாளான வெள்ளிக்கிழமை, நேற்று முன்தினம் சனிக்கிழமை மற்றும் நேற்று வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை என தொடர்ச்சியாக மூன்று நாட்கள் அரசு விடுமுறை என்பதால் வழக்கத்திற்கு மாறாக முருகன் மலைக் கோவிலில் அதிகாலை, 5:00 மணி முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர்.
மேலும் பெரும்பாலான பக்தர்கள் இரு சக்கர வாகனம், கார், வேன் மற்றும் பேருந்துகள் மூலம் மலைக்கோவிலுக்கு வந்ததால் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மலைக்கோவில் தேர் வீதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்ததால் பொதுவழியில், மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
அதே போல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருந்து மூலவரை வழிப்பட்டனர்.
முன்னதாக அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், தங்கவேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் தங்கத்தேரில் தேர்வீதியில் உலா வந்து அருள்பாலித்தார்.
l பொதட்டூர்பேட்டை திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.
இதில், பீமசேனன், துரியோதனனை வெற்றி கொண்டார். தொடர்ந்து, காப்பு கட்டி விரதம் மேற்கொண்டிருந்த திரளான பக்தர்கள் ஊர்வலமாக தீர்த்தவாரிக்கு கிராம எல்லைக்கு திரவுபதியம்மனுடன் வலம் வந்தனர்.
மாலை 6:00 மணிக்கு, சக்தி கரகத்துடன் மேளதாளம் முழங்க தீர்த்தக்கரையில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பக்தர்கள், திரவுபதியம்மனுடன் அக்னி குண்டத்தில் இறங்கி, நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

