/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குப்பம்கண்டிகையில் தீமிதி திருவிழா
/
குப்பம்கண்டிகையில் தீமிதி திருவிழா
ADDED : ஏப் 24, 2024 01:14 AM

திருவாலங்காடு ஒன்றியம், குப்பம்கண்டிகையில் அமைந்துள்ள செங்கழுனீர் மாகாளி அம்மன் கோவில் 300 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் தீமிதி திருவிழா நடக்கும். நேற்றுமுன்தினம் இரவு தீமிதி திருவிழா நடந்தது.
கடந்த 12ம் துவங்கி தொடர்ந்து 10 நாட்கள் அம்மன் திருவீதி புறப்பாடு நடந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 11: 00 மணியளவில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனை வழிப்பட்டனர்.
மாலை 6: 00 மணிக்கு காப்பு கட்டிய பக்தர்கள் தீமித்தனர். விழாவில் மணவூர், குப்பம்கண்டிகை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து சென்றனர்.
* திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவிலுடன் இணைந்தது திருவாலங்காடு பத்ரகாளியம்மன் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பவுர்ணமி அன்று பால்குடம் எடுத்து பெண்கள் அம்மனை வழிப்படுவது வழக்கம். அதன்படி பால்குடம் எடுத்து அம்மனை வழிப்படும் விழா நேற்று வெகுவிமரிசையாக நடந்தது.
திருத்தணி பலிஜாவாரி சங்கம் சார்பில் சித்ரா பவுர்ணமி ஒட்டி கோட்டா ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள, விஜயராகவ பெருமாள் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் விஜயராகவ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், திருத்தணி நகரில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.
* ஊத்துக்கோட்டை அருகே, போந்தவாக்கம் கிராமத்தில் உள்ள நாட்நாச்சியம்மன் கோவிலில், 3ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா நடந்தது.
காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், 6:30 மணிக்கு கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்தனர். பெண்கள் பால்குடம் ஏந்திச் சென்று அம்மனுக்கு அபிேஷகம் செய்தனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இரவு, ஊஞ்சல் சேவை நடந்தது. தேவந்தவாக்கம் ஸ்ரீதிரிபுர சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீதேவநாதீஸ்வரர் கோவிலில், மாலை, 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
பென்னலுார்பேட்டை நாகவல்லி அம்மன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து அபிேஷகம் செய்தனர். மாலை, தீமிதி திருவிழா நடந்தது.
ருத்ராபிஷேகம்
ஆர்.கே.பேட்டை அடுத்த ராசபாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது பாலகுருநாதீஸ்வரர் கோவில். சித்ரா பவுர்ணமியை ஒட்டி நேற்று காலை 9:30 மணிக்கு, கோவிலில் ருத்ராபிஷேம் நடத்தப்பட்டது. இதில், ராசபாளையம் கிராமத்தினர் திரளானோர் பங்கேற்றனர்.
இதே போல், அத்திமாஞ்சேரிபேட்டை கல்யாண சுந்தரேசனார் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளலார் மடத்தில் நேற்று ஜோதி தரிசனம் நடந்தது. சித்ரா பவுர்ணமியை ஒட்டி, காலை 9:00 மணி முதல் 12:00 மணி வரை பக்தி பாடல் நிகழ்ச்சி நடந்தது.
திருத்தணி அரக்கோணம் சாலையில் அரசு போக்குவரத்து பணிமனை எதிரே வள்ளலார் கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூசம் மற்றும் சித்ரா பவுர்ணமி விழா வெகு விமர்ச்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நேற்று சித்ரா பவுர்ணமி ஒட்டி நேற்று காலை, 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, வள்ளலாருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. மதியம், 12:00 மணிக்கு, ஜோதி தரிசனம் நடந்தது.
-- நமது நிருபர்குழு-

