/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேளாண் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடல்
/
வேளாண் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடல்
வேளாண் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடல்
வேளாண் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடல்
ADDED : ஆக 24, 2024 01:09 AM

திருவூர்,:வேளாண்மை அறிவியல் நிலையங்களின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் திருவள்ளூர் அடுத்த திருவூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
இதில் ஹைதராபாத் வேளாண்மை தொழில்நுட்ப செயல்பாட்டு மைய இயக்குனர் சைக்.என். மீரா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்காட்சி மற்றும் இயற்கை வேளாண்மை குறித்த மாணவர்களின் பேரணியை துவக்கி வைத்தார்.
பின் வேளாண் அறிவியல் நிலையங்களின் செயல்பாடுகள், தோட்டக்கலை பயிர்களின் முக்கியத்தும், நிரந்தர வருமானத்திற்கு கால்நடைகளின் பங்கு மற்றும் மதிப்பு கூட்டுதலின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார்.
திருவூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பானுமதி, சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் வேளாண் அறிவியல் நிலையத்தின் பங்கு குறித்து விளக்கி பேசினார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குனர் பி.பொ.முருகன் மண் வளத்தில் பசுந்தாள் உரங்கள், இயந்திரமுறை நடவு மற்றும் மதிப்புக் கூட்டுதல் மூலம் அதிக லாபம் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் கால்நடை பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குனர், வி.அப்பாராவ், மண்டல தீவனப்பயிர் இயக்குனர் அஜய்குமார் யாதவ் மற்றும் திருவூர் வேளாண் அறிவியல் நிலைய மற்றும் நெல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் உட்பட விவசாயிகள் பங்கேற்றனர்.