/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீரமங்கலத்தில் சுகாதார கேடு பகுதிவாசிகள் அதிருப்தி
/
வீரமங்கலத்தில் சுகாதார கேடு பகுதிவாசிகள் அதிருப்தி
வீரமங்கலத்தில் சுகாதார கேடு பகுதிவாசிகள் அதிருப்தி
வீரமங்கலத்தில் சுகாதார கேடு பகுதிவாசிகள் அதிருப்தி
ADDED : ஆக 18, 2024 11:08 PM

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வீரமங்கலம் ஊராட்சியில், மேல்நிலை குடிநீர் தொட்டிகள் முறையாக பராமரிக்காததால், சமீபத்தில் அங்கு சுகாதார பாதிப்பு ஏற்பட்டது. பத்துக்கும் மேற்பட்டோர் வயிற்று போக்கு பாதிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். சுகாதாரத் துறையினர் முகாம் அமைத்து, மருத்துவ சிகிச்சை மேற்கொண்டனர்.
வீரமங்கலத்தில் கழிவுநீர் கால்வாய்களும் முறையாக பராமரிக்கப்படாத நிலை நீடிக்கிறது. குறிப்பாக, கிராமத்தின் வடக்கு பகுதியில் கழிவுநீர் கால்வாய் துார்ந்து கிடக்கிறது. மழைநீரும், கழிவுநீரும் தெருவில் பாயும் நிலை உள்ளது.
இதனால் பகுதிவாசிகள் அதிருப்தியில் உள்ளனர். அதே போல், அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியும் இடிந்து விழும் நிலையில் கிடக்கிறது. இந்நிலையில் குடிநீர் தொட்டியின் பராமரிப்பும் கேள்விக்குறி தான் என பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
பள்ளி வளாகத்தில் உள்ள குளத்தில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால், நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.
ஆர்.கே.பேட்டை வட்டார சுகாதார அதிகாரிகள், கிராமத்தில் கழிவுநீர் தேங்கி நிற்காதபடி ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து துாய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

