/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
72,000 கிலோ பசுந்தாள் உர பயிர் விதை வினியோகம்
/
72,000 கிலோ பசுந்தாள் உர பயிர் விதை வினியோகம்
ADDED : ஆக 24, 2024 09:57 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், 3,611 விவசாயிகளுக்கு, 72,220 கிலோ பசுந்தாள் உரம் வினியோகிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், முதல்வரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர சாகுபடியினை ஊக்குவித்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தில் இறவைப் பாசனப் பகுதிகளில் 12,000 ஏக்கரில் 1.20 கோடி ரூபாய் மானியத்தில் பசுந்தாள் உர பயிர் பயிரிட விவசாயிகளுக்கு வட்டார வேளாண் விரிவாக்க மையம் வாயிலாக, பசுந்தாள் உர விதைகள் ஒரு கிலோ 99.50 ரூபாயில், 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை 3611 ஏக்கருக்கு 72,220 கிலோ பசுந்தாள் உர விதைகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2016- -- 23 வரை, 1,63,346 விவசாயிகளுக்கு, 363.08 கோடி ரூபாய் பயிர் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.
தவறான வங்கி கணக்கு பதிவேற்றம் செய்யப்பட்டதால் வழங்கப்படாமல் விடுபட்ட 7,659 விவசாயிகளுக்கு 14.49 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

