/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளி வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள கட்டுமான பொருட்களால் இடையூறு
/
பள்ளி வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள கட்டுமான பொருட்களால் இடையூறு
பள்ளி வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள கட்டுமான பொருட்களால் இடையூறு
பள்ளி வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள கட்டுமான பொருட்களால் இடையூறு
ADDED : செப் 15, 2024 11:25 PM

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம் பொன்பாடி ஊராட்சி கொல்லகுப்பம் கிராமத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளி வளாகத்தில் பாழடைந்த கிணறு ஒன்று திறந்த நிலையில் உள்ளது. மேலும் பள்ளியின் கட்டுமான பணிகளுக்காக மண், ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் பணிகள் துவங்காமல் உள்ளன.
இதனால் பள்ளி மாணவர்கள் விளையாடுவதற்கும் கடும் சிரமப்படுகின்றனர். மேலும், பள்ளி வளாகத்தில் திறந்த கிணற்றில், மாணவர்கள் விளையாட்டாக அடிக்கடி சென்று எட்டிச் பார்த்து வருகின்றனர்.
இதனால் மாணவர்கள் கிணற்றில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. பள்ளிக்கு சுற்றுசுவர் இல்லாததால் பள்ளி விடுமுறை நாட்கள் மற்றும் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடந்து வருகின்றன.
எனவே மாவட்ட நிர்வாகம் பள்ளிக்கு சுற்றுசுவர் அமைத்தும், கிணற்றை மூடவும், மாணவர்களுக்கு இடையூறாக உள்ள ஜல்லிகற்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.