/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கவரைப்பேட்டையில் பயன்பாட்டுக்கு வராத செவிலியர் குடியிருப்பு
/
கவரைப்பேட்டையில் பயன்பாட்டுக்கு வராத செவிலியர் குடியிருப்பு
கவரைப்பேட்டையில் பயன்பாட்டுக்கு வராத செவிலியர் குடியிருப்பு
கவரைப்பேட்டையில் பயன்பாட்டுக்கு வராத செவிலியர் குடியிருப்பு
ADDED : ஜூலை 15, 2024 02:02 AM

கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டையில் செவிலியர் இல்லாத அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்ட செவிலியர் குடியிருப்பு, ஓராண்டாக பயன்பாடின்றி வீணாகி வருகிறது.
கவரைபேட்டையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. தினசரி, 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். எந்த நேரமும் அழைக்கும் தொலைவில் செவிலியர்கள் இருக்க வேண்டும் என்பதற்காக மருத்துவமனை அருகே ஓராண்டுக்கு முன் இரு செவிலியர் குடியிருப்பு திறக்கப்பட்டது.
அந்த மருத்துவமனையில் மூன்று நிரந்தர செவிலியர்கள் இருக்க வேண்டும். ஆனால் ஒரு நிரந்தர செவிலியர் மட்டுமே இருக்கிறார். அவரும் அயல் இட பணியில் சென்னையில் உள்ள பொது சுகாதார இயக்குனகரத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனால் நிரந்தர செவிலியர்கள் இன்றி, புதிதாக நிறுவப்பட்ட செவிலியர் குடியிருப்பு பயன்பாடின்றி வீணாகிறது.
நோயாளிகளின் நலன் கருதி, உடனடியாக போதிய செவிலியர்கள் நியமித்து, அவர்களுக்கான குடியிருப்புகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

