/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓட்டுச்சாவடிகளில் குடிநீர், மின்விளக்கு, சாய்வு தளம்:மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவு
/
ஓட்டுச்சாவடிகளில் குடிநீர், மின்விளக்கு, சாய்வு தளம்:மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவு
ஓட்டுச்சாவடிகளில் குடிநீர், மின்விளக்கு, சாய்வு தளம்:மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவு
ஓட்டுச்சாவடிகளில் குடிநீர், மின்விளக்கு, சாய்வு தளம்:மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவு
ADDED : மார் 29, 2024 09:09 PM
திருவள்ளூர்:'ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் போன்ற பல்வேறு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தயார் நிலையில் இருக்க வேண்டும்' என, மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவிட்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, ஆவடி, அம்பத்துார், மதுரவாயல், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
மாவட்டம் முழுதும், 290 பள்ளிகளில், 3 ஆயிரத்து 665 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
லோக்சபா தேர்தல் ஏப்.,19ல் நடக்கிறது. இதையடுத்து, மாவட்டத்தில் தயாராகி வரும் ஓட்டுச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர், நேற்று பெரியகுப்பம் டி.இ.எல்.சி., நடுநிலைப் பள்ளி மற்றும் கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஓட்டுச்சாவடி மையங்களில் ஏற்படுத்தப்பட்டு பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
பின் செய்தியாளர்களிடம் கலெக்டர் கூறியதாவது:
தேர்தலில், அனைத்து வாக்காளர்களும் ஓட்டளிக்க வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு, இரண்டாம் கட்ட பயிற்சி இன்றும் நாளையும் 10 தொகுதிகளிலும் நடக்கிறது.
இதில் தேர்தல் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக பங்கேற்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பயிற்சியில் பங்கேற்காதோருக்கு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்-1951ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், ஓட்டுப்பதிவு நாளன்று வரும் வாக்காளர்களுக்கு, அனைத்து அடிப்படை வசதிகளான குடிநீர், மின்விளக்கு, தளம், கழிப்பறை வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் போன்ற பல்வேறு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தயார் நிலையில் இருக்க வேண்டும் என, உதவி தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

