ADDED : ஏப் 26, 2024 08:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை பகுதியைச் சேர்ந்த, 16 வயது மாணவி தனியார் பள்ளியில், 10 வகுப்பு படித்து வந்தார். மாணவியின் வீட்டில், திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் ஏர்ணாமங்களம் கிராமத்தைச் சேர்ந்த மோகன், 33 என்பவர் இரு ஆண்டுகளாக கார் டிரைவாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன், மோகன் மாணவியை மிரட்டி பலத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, மோகன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தால், மாணவியின் பெற்றோர் திருத்தணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மலர் வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் மோகனை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

