/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போதை பொருட்கள் புழக்கம் கவுன்சிலர்கள் காரசார விவாதம்
/
போதை பொருட்கள் புழக்கம் கவுன்சிலர்கள் காரசார விவாதம்
போதை பொருட்கள் புழக்கம் கவுன்சிலர்கள் காரசார விவாதம்
போதை பொருட்கள் புழக்கம் கவுன்சிலர்கள் காரசார விவாதம்
ADDED : ஆக 02, 2024 01:54 AM
எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் ஒன்றிய அலுவலக வளாகத்தில், தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்தது. துணை தலைவர் சுரேஷ் வரவேற்க, ஒன்றிய ஆணையர்கள் ராமகிருஷ்ணன், அற்புதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருமலை --காங்., ஒன்றிய கவுன்சிலர் கூட்டங்களில் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொள்ளாததால், நாங்கள் கேட்கும் தகவல்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
ராமகிருஷ்ணன் ஆணையர்:
அனைத்து அரசு துறை அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.
திருமலை - காங்.,: வெங்கலில் இருந்து ஏனம்பாக்கம், கல்பட்டு, ஆவாஜிப்பேட்டை வழியே அரசு பேருந்து இயக்கவேண்டும்.
ராமகிருஷ்ணன் ஆணையர்:
சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்.
சரவணன் -அ.தி.மு.க.,: ஒன்றியத்தில் உள்ள, 53 ஊராட்சிகளிலும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் மற்றும் கஞ்சா நடமாட்டம் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கின்றனர்.
ரமேஷ் -தலைவர் : இதுகுறித்து மாவட்ட கலெக்டர், எஸ்.பி., டி.எஸ்.பி., ஆகியோரிடம் புகார் கொடுத்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ரவி - கம்யூ.,:
மக்களுடன் முதல்வர்' திட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ராமகிருஷ்ணன் ஆணையர்:
இதுகுறித்து தகவல் வழங்கப்படும்.
ரவி கம்யூ.,: தானாகுளம் -அன்னதானகாக்கவாக்கம் இடையே சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
ரமேஷ் தலைவர் : இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.