/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை மீடியனில் காய்ந்த வாழை மரங்கள் அச்சத்தில் வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள்

ADDED : ஆக 05, 2024 02:39 AM

கடம்பத்துார், ஆக. 5-
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் ஒன்றியம் கீழச்சேரி ஊராட்சியில் அமைந்துள்ளது அரசு நிதி உதவி பெறும் பள்ளி. இப்பள்ளிக்கு காலை உணவு திட்டத்தை துவக்கி வைக்க கடந்த 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வந்தார்.
இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் காட்டு கூட்டு சாலை முதல் கீழச்சேரி அரசுநிதி உதவி பெறும் பள்ளி வரை 11 கி.மீ., துாரத்திற்கு நெடுஞ்சாலை மீடியன் மற்றும் சாலையின் இருபுறமும் கொடிக்கம்பங்களும் மீடியன் பகுதியில் வாழை மரங்களும் கடம்பத்துார் மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டது.
இதில் மீடியன் பகுதியில் அமைக்கப்பட்ட கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன.
ஆனால் அகற்றப்படாத வாழைமரங்கள் காய்ந்து கீழே விழுவதால், வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
அசம்பாவிதம் நிகழும் முன் மீடியன் பகுதியில் உள்ள காய்ந்த வாழை மரங்களை அகற்ற வேண்டுமென, வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.