/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அடிக்கடி மின் தடையால் குடிநீர் வினியோகத்தில் சிக்கல்
/
அடிக்கடி மின் தடையால் குடிநீர் வினியோகத்தில் சிக்கல்
அடிக்கடி மின் தடையால் குடிநீர் வினியோகத்தில் சிக்கல்
அடிக்கடி மின் தடையால் குடிநீர் வினியோகத்தில் சிக்கல்
ADDED : மே 10, 2024 01:01 AM
திருத்தணி, திருத்தணி அடுத்த பூனிமாங்காடு துணை மின்நிலையத்தில் இருந்து, பூனிமாங்காடு, பொன்பாடி, வெங்கடாபுரம், நல்லாட்டூர், தும்பிக்குளம், நெமிலி ஆகிய ஊராட்சிகள் உட்பட, 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக அடிக்கடி அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுகிறது. மேலும், வழக்கமான வினியோகம் செய்யும் மும்முனை மின்சாரம் நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஊராட்சிகளில் குடிநீர் வினியோகம் செய்வதற்கு மின்மோட்டார்கள் இயக்கி மேல்நிலைத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியவில்லை.
இதனால் ஊராட்சிகளில் குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால், மும்முனை மின்சாரம் மேற்கண்ட ஊராட்சிகளுக்கு மட்டும் தினமும் கூடுதலாக மூன்று மணி நேரம் வினியோகம் செய்ய வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.