/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் 11 இடங்களில் தேர்தல் கூட்டம் நடத்தலாம்
/
திருத்தணியில் 11 இடங்களில் தேர்தல் கூட்டம் நடத்தலாம்
திருத்தணியில் 11 இடங்களில் தேர்தல் கூட்டம் நடத்தலாம்
திருத்தணியில் 11 இடங்களில் தேர்தல் கூட்டம் நடத்தலாம்
ADDED : மார் 21, 2024 09:43 AM

திருத்தணி:அரக்கோணம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட திருத்தணி சட்டசபை தொகுதியில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்களின் ஆலோசனை கூட்டம் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில்  நடந்தது.
உதவி தேர்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான தீபா பங்கேற்று பேசியதாவது:
அரசியல் கட்சியினர் தேர்தல் சம்பந்தமான கூட்டங்கள், பேரணி நடத்துவதற்கும், கட்சி கொடிகள் கட்டுவதற்கும் கண்டிப்பாக அனுமதி பெற வேண்டும்.  திருத்தணி தொகுதியில் கூட்டம் நடத்துவதற்கு, 11 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களில் மட்டுமே நடத்த வேண்டும்.
தேர்தல் ஆலோசனை கூட்டங்கள் தனியார் மண்டபத்தில் நடத்தும் போது, மண்டப உரிமையாளர்களிடம் அனுமதி, சுவர் விளம்பரம் எழுதும் போதும் கட்டட உரிமையாளர்கள் அனுமதி பெற்று எழுத வேண்டும். தேர்தல் தொடர்பான அனைத்து அனுமதி பெற ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அதேபோல், தேர்தலில் பணப் பரிமாற்றம், பரிசுப் பொருட்கள் வழங்குவது, சட்டம் - ஒழுங்கு பிரச்னை போன்றவை நடந்தால், 93637 56827 என்ற மொபைல் போன் மூலம் புகார் தெரிவிக்கலாம்.  அனுமதியின்றி கூட்டம், பேரணி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுப்பதுடன் வழக்கு பதியப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் திருத்தணி தாசில்தார் மதியழகன், வருவாய் ஆய்வாளர் கமல் உட்பட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

