/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூங்கா நகரில் சாலை நடுவில் மின்கம்பம் மின்வாரிய ஊழியர்கள் 'புது டெக்னிக்' நிலம் அளவீடு செய்வதில் வருவாய் துறை அலட்சியம்

ADDED : மே 01, 2024 01:29 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சி எல்லையை ஒட்டி அமைந்துள்ளது, பூங்கா நகர். திருவள்ளூர் ஒன்றியம் காக்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட இப்பகுதி, வளர்ந்து வரும் நகராக உருவாகி வருகிறது.
பூங்கா நகர் தனியார் பள்ளி எதிரில், செம்பருத்தி சாலை சந்திப்பில் முல்லை தெரு உள்ளது. இங்கு, 15க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த தெருவில் சில இடங்களில் ஆக்கிரமிப்பு இருப்பதால், சாலை குறுகலாக உள்ளதால், வருவாய் துறையினர் அளவீடு செய்ய வேண்டும் என, பல ஆண்டுகளாக மனு அளித்தும் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் முல்லை தெரு சந்திப்பில், புதிதாக மின்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின்கம்பத்தால், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
முல்லை தெரு குறுகலாக இருப்பதால், அதை அளவீடு செய்ய பலமுறை வருவாய் துறையிடம் மனு அளித்தும், ஆர்.டி.ஐ., மனு அளித்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை.
இந்த சாலையில் பாதசாரிகள் பயணம் செய்வதற்கும், வாகனங்கள் திருப்புவதற்கும் மிகுந்த இடையூறு உள்ள நிலையில், தற்போது மின்கம்பம் நடப்பட்டு உள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.