/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புறநகர் ரயிலில் மின்சாதனம் பழுது: போக்குவரத்து பாதிப்பு
/
புறநகர் ரயிலில் மின்சாதனம் பழுது: போக்குவரத்து பாதிப்பு
புறநகர் ரயிலில் மின்சாதனம் பழுது: போக்குவரத்து பாதிப்பு
புறநகர் ரயிலில் மின்சாதனம் பழுது: போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூன் 20, 2024 12:52 AM
மீஞ்சூர்:சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று மாலை, 5:05மணிக்கு புறநகர் ரயில் கும்மிடிப்பூண்டி நோக்கி புறப்பட்டது. மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையத்திற்கு, 6:20மணிக்கு வந்தடைந்தது.
மீண்டும் ரயில் அங்கிருந்து புறப்படும்போது, ரயிலின் மேற்பகுதியில் மின்சார கம்பியுடன் இணைப்பில் உள்ள சாதனம் பழுதானது. இதனால் ரயில் மேற்கொண்டு இயங்காமல் அதே ரயில் நிலையத்தில் நின்றது. இதனால் அடுத்தடுத்த கும்மிடிப்பூண்டி நோக்கி வந்த புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
ரயில்வே ஊழியர்கள் பழுதை சரிசெய்த பின், இரவு, 7:20 மணிக்கு புறநகர் ரயில் ஒரு மணிநேர தாமத்துடன் புறப்பட்டது. அதையடுத்து அனைத்து ரயில்களும் ஒன்றன்பின் ஒன்றாக இயக்கப்பட்டன.